ரயில்வே திணைக்களம் மறுசீரமைப்பு: அமைச்சரவை பத்திரம் அடுத்த மாதம் முன்வைப்பு

ரயில்வே திணைக்களத்தின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த மாதத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சின் அதிகாரிகள் குழுவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.

குழுவின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்து அமைச்சரவைக்கு சமர்பிப்பதற்கான பிரேரணையை தயாரிப்பதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

அமைச்சரவையின் தீர்மானத்தின் பின்னர் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என ரஞ்சித் ரூபசிங்க மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles