ரயில் கட்டண அதிகரிப்பு ஒத்திவைப்பு -ரயில்வே திணைக்களம்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தவிருந்த ரயில் கட்டண அதிகரிப்பு ஒத்திப் போடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

கால வரையறையின்றி ரயில் கட்டண அதிகரிப்பு ஒத்திப் போடப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ரயில் கட்டண அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடும் பணிகளுக்காக அரசாங்க அச்சகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணத்தோடு ஒப்பிடுகையில் அரைவாசியாக ரயில் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளவும் அதன் மூலம் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய ஆகக்குறைந்த கட்டணமான பத்து ரூபாவை 20 ரூபாவாக அதிகரிப்பதற்கு அதன் மூலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

Related Articles

Latest Articles