ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

ஹபராதுவ ரயில் நிலையத்திற்கு அருகில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெதிபிட்ட – அங்குலுகஹா, பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தொிவிக்கப்படுகிறது.

இந்த இளைஞன் நேற்று (25) மாலை மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles