கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இன்று பிற்பகல் ரயில்மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
முறிகண்டி பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். ராணி ரயிலேயே அவர் மோதுண்டுள்ளார்.
