ரயில் மோதி யாசகர் பலி

புத்தளம் – முந்தல் பிரதேசத்தில் ரயில் மோதி யாசகர் ஒருவர் நேற்று முன்தினம் (05) உயிரிழந்துள்ளார்.

புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த பயணிகள் ரயிலில் மோதியே குறித்த யாசகர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பகுதிக்கும் – மங்கள எளிய பகுதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலேயே குறித்த யாசகர், ரயில் பாதைக்கு அருகே நின்றுகொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்த குறித்த யாசகரின் சடலம், ரயில் ஊழியர்களால் முந்தல் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யாசகர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles