ரயில் விபத்து: மலையகத்துக்கான சேவைகள் பாதிப்பு

மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் லொறியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் மலையகத்துக்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பயணிகள் மற்றும் சாரதிகள் பின்வரும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கொழும்பில் இருந்து பஸ்யால சந்தியிலிருந்து மீரிகம அதிவேக நெடுஞ்சாலை வரை பயணிக்கும் வாகனங்கள் பஸ்யால சந்தியில் நுழைய முடியாது. இதனால் கொழும்பு – கண்டி பாதையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திவுலப்பிட்டியிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் மீரிகம நகரத்திலிருந்து இடதுபுறமாகத் திரும்பி தங்ஓவிட்ட மற்றும் வரக்காபொல வீதியில் நுழைந்து கொழும்பு – கண்டி பாதையில் பிரவேசிக்கலாம்.

மீரிகம அதிவேக வீதியில் இருந்து புறப்பட்டு கொழும்பு மற்றும் திவுலப்பிட்டிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஹந்தாமுல்ல சந்தியில் இடதுபுறம் திரும்பி கொழும்பு – குருநாகல் வீதி இலக்கம் 5 க்குள் பிரவேசிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

Related Articles

Latest Articles