ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, பாராளுமன்றம்சென்ற அவர், அதன்பின்னர் நடைபெற்ற அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் வெற்றிபெற்றார்.
எனினும், இம்முறை தோல்வியடைந்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சி இரு அணிகளாக பிளவுபட்டமையே இதற்கு பிரதான காரணமாகும்.
அத்துடன், பிணைமுறி விவகாரம் தொடர்பிலும் கடந்தகாலங்களில் ரவி கருணாநாயக்க சர்ச்சைக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட பாலித தெவரப்பெருமவுக்கான வெற்றிவாய்ப்பும் குறைவாகவே காணப்படுவதாக தெரியவருகின்றது.