ரஷ்யாவின் பீரங்கியை களவாடிய உக்ரைன் விவசாயி (காணொளி)

ரஷ்ய படைகளின் பீரங்கியை , உக்ரைன் நாட்டு விவசாயியொருவர் திருடிச்செல்லும் காணொளி சமூகவலைத்தலங்களில் வைரலாகியுள்ளது.

உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.

இன்று 7வது நாளாக ரஷியா உக்ரைன் மீது ஆக்ரோஷ தாக்குதல் நடத்திவருகிறது.

இந்த நிலையில் ரஷியாவின் பீரங்கியை உக்ரைன் விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் இணைத்து திருடிச்செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

திகதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில், ரஷிய எம்டிஎல்வி எனப்படும் ( துணை கவச கண்காணிப்பு வாகனம்) பீரங்கியை தனது டிராக்டருடன் இணைத்து திருடிச்செல்கிறார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது,. இங்கிலாந்து எம்பி ஜானி மெர்சர் உட்பட, “நிபுணர் இல்லை, ஆனால் படையெடுப்பு சிறப்பாக நடப்பதாகத் தெரியவில்லை. உக்ரேனிய டிராக்டர் இன்று ரஷிய டாங்கியை திருடுகிறது ”. என கூறி உள்ளார்.

இந்த வீடியோவை இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் தூதர் அலெக்சாண்டர் ஷெர்பாவும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் தூதர் ஷெர்பா கூறும்போது, “உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மிகவும் கடினமானவர்கள்” என்றார்.

Related Articles

Latest Articles