உக்ரைன் போரில் ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை தொடங்கிய பின்னர், அதற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்து உள்ளார்.
இது குறித்து ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ ரஷ்யா இன்னும் தாக்குதல் நடத்தி உக்ரைனுக்கு வலியை ஏற்படுத்த முயற்சிக்கிறது. புடின் உலகை சோதிக்கிறார்.
ரஷ்யா மற்றும் ரஷ்யா உடன் தொடர்புடைய தனிநபர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள், கடுமையான வரிகள் விதிக்க வேண்டும்.
ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் பிற கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். புடின் பேச்சு வார்த்தைகளை விரும்பவில்லை.” – என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
இந்தசூழலில், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, உக்ரைன்மீதான ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு ஆஸ்திரேலியா துணை நிற்கும் என்று உக்ரைனுக்கான ஆஸ்திரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவை, வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் மீள் பதிவு செய்துள்ளார்.