உக்ரைனின் தெற்கு பகுதியான கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரானது 8-வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் தெற்கு நகரமான கெர்சனை ரஷிய படைகள் கைப்பற்றியதாக இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் நேற்று கூறியது. அந்த நகரின் மையப்பகுதிக்குள் ரஷிய படைகள் நகர்ந்தாலும் குறிப்பிட்ட அளவே பலன் அடைந்துள்ளன. இந்த நகரின் பெரும்பகுதியை பிடித்து விட்டதாக ரஷிய ராணுவ அமைச்சகமும் கூறியது.
ஆனால் இந்த தகவலை கெர்சன் மேயர் மறுத்தார். தங்கள் நகரம் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் நேற்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கெர்சன் நகர் முழுவதுமாக தற்போது தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதனை உக்ரைனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.