உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடர்பாக போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவுள்ளது என சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை சட்டத்தரணியான Karim Kann தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தான் மேற்கொண்ட விசாரணைகளில், தனது அதிகார வரம்பிற்குள் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியாயமான அடிப்படை காரணங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் Karim Kann தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைகளை தொடங்குவதற்கு தான் திட்டமிட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திடம் இதற்கான அனுமதியை கோரவுள்ளதாகவும் Karim Kann தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் உட்பட 38 நாடுகளின் பரிந்துரைக்கிணங்க உடனடியாக திறந்த விசாரணைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.