ரஷ்யா, உக்ரைன் ஜனாதிபதிகள் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு!

உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு நேரத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி புடினை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“ரஷ்ய ஜனாதிபதியுடன் சிறந்த நட்பு ரீதியான உறவை நான் கொண்டுள்ளேன். இப்போது அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தேவையின்றி பலரை கொல்கிறார். காரணமே இல்லாமல் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அவரது செயல் எனக்கு அறவே பிடிக்கவில்லை. இந்தப் போக்கு ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வித்திடும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியையும் ட்ரம்ப் சாடியுள்ளார்.

“அவரது வாய் பேச்சுதான் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. அவர் அமைதியாக இருப்பது நல்லது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles