ரஷ்யா, உக்ரைன் மோதல் – தேயிலை ஏற்றுமதி இடைநிறுத்தம்!

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர்மூண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்குமான தேயிலை ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து கூடுதலாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் ரஸ்யா மூன்றாம் இடத்தையும், உக்ரைன் 14 ஆவது இடத்தையும் வகிக்கின்றன.   போர் நிலைமையினால் குறித்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான பணத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும், கப்பல் நிறுவனங்கள் அந்த நாடுகளுக்கு செல்ல தயக்கம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வேறு நாடு ஒன்றின் ஊடாக நிதி கொடுக்கல் வாங்கல்களை செய்ய முயற்சித்த போதிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரத் தடைகளினால் இந்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளது என ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2021ம் ஆண்டில் ரஸ்யாவிற்கு 27 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையும், உக்ரைனுக்கு 4 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles