ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் வெற்றி….!

ரஷ்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் புடின் 87.8 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.இதன்மூலம் 71 வயதான புடின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.

இதன்மூலம் ரஷியா வரலாற்றில் அதிக வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தவர் என்ற பெருமையை புடின் பெறுகிறார். இதற்கு முன்னதாக ஜோசப் ஸ்டாலின் ரஷ்யாவை அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

மேலும், சோவியத் ரஷியா உடைந்த பிறகு அதிக வாக்குகள் பெற்ற ஜனாதிபதி என்ற பெருமையையும் புடின் பெற்றுள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக இரண்டு வருடங்கள் சண்டை நடைபெற்று வருவது, எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்தது உள்ளிட்ட சம்பவங்கள் புடினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டிய புடின் வெற்றி பெற்றுள்ளார்.

ரஷியாவில் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறவில்லை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியை ஆஸ்திரேலிய பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் சர்வாதிகாரியென விளித்துவருகின்றனர். ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் மரணத்துக்குகூட ‘கொலைகார சர்வாதிகாரி புடின்’ பொறுப்புக்கூற வேண்டும் என விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles