ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை!

ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

உக்ரைன்மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர் தொடுத்தது. 2 ஆண்டுகளை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த போரில் ரஷ்யா கடந்த 2022 அக்டோபர் மாதம் உக்ரைனின் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவின் இந்த செயல் மனிதத் தன்மையற்றது என பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இதனையடுத்து ரஷ்யாமீது நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்கு (வயது 69) மற்றும் இராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதி புடின் மீதும் சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles