ரஷ்ய விமானம் விபத்து: 49 பேர் உயிரிழப்பு?

 

ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் உடற்பகுதியை மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தில் பயணிகள் உட்பட 49 பேர் பயணித்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

“ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் எம்ஐ-8 ஹெலிகாப்டர் திடீரென ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மாயமானது. அந்த, விமானத்தின் எரியும் உடற்பகுதியைக் கண்டறியப்பட்டுள்ளது.” என்று ரஷ்யாவின் அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது.
“இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை” என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய-சீன எல்லையில் உள்ள பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரத்திலிருந்து டின்டா நகரத்திற்குச் சென்ற விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர்.

49 பேருடன் சென்ற இந்த பயணிகள் விமானம் ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் சென்றபோது ரேடாரில் இருந்து காணாமல் போனது. இதனை அமூர் பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ் உறுதி செய்துள்ளார்.

சைபீரியாவைச் சேர்ந்த அங்காரா நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், டின்டா விமான நிலையத்தை நெருங்கும் போது ரேடாரில் இருந்து மாயமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Latest Articles