ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் சூழ்ச்சி!

” ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் 2009 இல் இருந்து முயற்சித்துவருகின்றனர். அறகலயவிலும் அவர்களின் பங்களிப்பு இருந்தது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2015 பொதுத்தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக்ச இருக்கவில்லை. எனினும், கட்சியின் அழைப்பின் பிரகாரமே 2015 தேர்தலில் அவர் போட்டியிட்டார். இம்முறை போட்டியிடமாட்டார் என்ற முடிவிலேயே மஹிந்த ராஜபக்ச ஆரம்பம் முதலே இருந்தார். அந்தவகையிலேயே அவர் ஒதுங்கினார்.

இம்முறை தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் களமிறங்கும் முடிவில் நான் இருந்தேன். கட்சி விடுத்த கோரிக்கையால், நாடு முழுவதும் கட்சி உறுப்பினர்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளதால் பெயர் தேசிய பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சக்களின் அரசியல் பயணத்துக்கு முடிவுகட்டுவதற்கு 2009 ஆம் ஆண்டிலிருந்தே உலகில் இருந்து குழுவொன்று முயற்சித்துவருகின்றது.  ராஜபக்சக்களின் அரசியலை வீழ்த்துவதற்கு புலி டயஸ்போராக்கள் முயற்சித்துவருகின்றனர்.

அறகலயவிலும் அவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. அறகலயவில் உண்மையான போராட்டக்காரர்களும் இருந்தனர். ஆனால் ஓர் அங்கமாக சூழ்ச்சி திட்டமும் இருந்தது. டயஸ்போராக்களில் சிலர் இன்று அரசியலுக்கும் வந்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்துக்கு டயஸ்போராக்களின் ஆதரவு வழங்கினர். ராஜபக்சக்களை வீழ்த்துவதற்காகவே இந்த ஆதரவு வழங்கப்பட்டது.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles