ராஜபக்சக்களுக்கு மின்சார கதிரை: தமிழக தலைவர்களுக்கு கச்சத்தீவு!

” இலங்கையில் மின்சாரக் கதிரை கதைகூறி ராஜபக்சக்கள் அரசியல் நடத்தியதுபோல, தமிழக முதல்வர் கச்சத்தீவு விவகாரத்தை கையிலெடுத்துள்ளார்.”  – என்று சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் தமிழக முதல்வர் வெளியிடும் கருத்துகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் தமிழகத்தில் எழும் பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக இவ்விவகாரம் பயன்படுத்தப்படலாம்.

தமிழக முதல்வருக்கு , மஹிந்த ராஜபக்சபோல் மின்சார கதிரையை வைத்து அரசியல் நடத்தும் சூழ்நிலை இல்லை. எனவே, தமிழக முதல்வர் உட்பட தமிழக தலைவர்கள் கச்சத்தீவு விவகாரத்தை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர்.

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுவிட்டது. அது இலங்கைக்கு உரித்தானது.” – என்றார்.

Related Articles

Latest Articles