ராஜபக்சக்களுடன் இனி அரசியல் பயணம் இல்லை!

” செத்து மடிந்தாலும் பரவாயில்லை, இனி ஒருபோதும் ராஜபக்சக்களுடன் இணைந்து அரசியல் செய்யப்போவதில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.

புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாடு வங்குரோத்து அடைந்துள்ளது, அதற்கு நாமும் பொறுப்புகூறவேண்டும். கோட்டாபய ராஜபக்சவுக்காக வாக்குதிரட்டியது கவலையளிக்கின்றது. அவர் உரிய முடிவுகளை எடுக்கவில்லை. எனவே, ராஜபக்சக்களுடன் இனி அரசியல் பயணத்தை தொடரப்போவதில்லை.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரியங்கர ஜயரத்ன தற்போது, ரணில் ஆதரவு அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles