ராஜபக்சக்களுடன் விமல் மீண்டும் சங்கமம்?

ராஜபக்சக்களுடன் தான் மீண்டும் இணையவுள்ளார் என வெளியாகும் தகவலை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நிராகரித்துள்ளார்.

“ மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பிரகாரம் விமல் வீரவன்சவுடன் பேச்சு நடத்தினேன். அவர் மொட்டு கூட்டணியுடன் இணைவார். வாசு தேவ நாணயக்காரவும் வருவார்.” என்று ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே தனக்கு அவ்வாறானதொரு எண்ணம் இல்லை, சர்வஜன அதிகாரத்துடன்தான் பயணம் தொடரும் என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles