உகண்டா மற்றும் சீசல்ஸ் ஆகிய நாடுகளில் ராஜபக்ச குடும்பத்தால் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுங்கள் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ராஜபக்சக்களால் களவாடப்பட்டதாகக் கூறப்படும் பணம் உகண்டாவில் இருந்தால் தற்போது அதனை கொண்டுவரமுடியும். அதற்கு முழு ஆதரவையும் வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
18 பில்லியன் டொலர்கள் இருப்பதாகக் கூறினர். அதனை கொண்டுவந்தால் கடனை செலுத்திவிடலாம். அப்படி செய்தால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றின் கடன் தேவையில்லை.
ராஜபக்ச பரம்பரை மற்றும் எமது கட்சி இதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும். எம்மால் விமானத்தில் உகண்டா மற்றும் சிசல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்படும் பணத்தை கொண்டுவாருங்கள்.” – என்றார்.
