ராஜபக்ச அரசின் கொடூர ராணுவ முகம் – ரிஷாட்டின் கைதுக்கு மனோ கண்டனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,

” பாராளுமன்ற உறுப்பினர், கட்சித் தலைவர் ரிசாத் பதியூதினை இந்த ரமழான் மாதத்தில் “அதிகாலை 3 மணி” க்கு வீடு புகுந்து, தலைமறைவாக வாழும் பாதாள உலக கேடியை இழுத்து செல்வதை போல் கைது செய்ததன் பின்னுள்ள “ஆவேசம்” என்ன? ராஜபக்ச அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?

Related Articles

Latest Articles