ராஜஸ்தான், குஜராத் அணிகள் இன்று மோதல்!

 

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 52 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும்.

இரு அணிகளும் தலா 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளை பெற்றுள்ளன.

எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி (0.510) 4-வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் (-0.147) 5-வது இடத்திலும் உள்ளன.

ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 3-ல் தோல்வியை சந்தித்துள்ளது. இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமாகும்.

Related Articles

Latest Articles