ராஜிதவிடம் ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி!

சர்வஜன வாக்கெடுப்புமூலம் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித எண்ணமும் இல்லை என ஜனாதிபதி என்னிடம் உறுதிப்படுத்தினார். எனவே, உரிய வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கருத்து வெளியிட்டபோது, அது தொடர்பில் ஜனாதிபதியிடம் வினவினேன். அவ்வாறான எவ்வித திட்டமும் இல்லை, தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

அடுத்தது ஜனாதிபதியின் பதவிகாலம் நீடிப்பு பற்றியும் தகவல்கள் வெளியாகின. அது பற்றியும் வினவினேன். அவ்வாறு எவ்வித திட்டம் இல்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வெற்றியோ, தோல்வியோ நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் பெரும்பாலானவர்கள் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை” – என்றார்.

Related Articles

Latest Articles