மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று 68 ஆவது அகவையில் கால்பதிக்கிறார்.
இவர் பொகவந்தலாவ இராணிக்காடு எனும் இடத்தில் பிறந்து பின்பு கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்தில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
தனது விடாமுயற்சியின் காரணமாக படிப்படியாக ஒரு விவசாயியாக தன்னை வளப்படுத்திக் கொண்டதுடன் சமூக அக்கறையின் காரணமாக அரசியலுக்குள் பிரவேசித்து பிரதேச சபை தலைவராக மாகாண கல்வி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினராக இராஜாங்க கல்வி அமைச்சராக விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சராக இப்படி பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இவர் இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியாகவும் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










