நாடாளுமுன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் மனைவி உட்பட நால்வரை 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரின் தந்தை, சகோதரன், தரகர் ஆகியோர் கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கயை ஏற்று நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்தது.
சந்தேகநபர்களை எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.