விசாரணைகள் முடிவடையும்வரை ரிஷாட் பதியுதீனுக்கு பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அமைச்சர் சரத் வீரசேகர இன்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
ரிஷாட் பதியுதீன் மட்டுமல்ல பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்பு உத்தரவின் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம்.பிக்களுக்கு இதற்கான அனுமதியை வழங்கவேக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்புக்கு அது பாதகமாக அமைந்துவிடும் என்பதாலேயே அக்கோரிக்கையை விடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.










