அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதீயுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை கைது தெஹிவளைப் பகுதியில் வைத்து சிஐடியினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்தே விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போத அரச வளத்தை முறைகேடாக பயன்படுத்தியமை, தேர்தல் சட்டத்தைமீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரிஷாட்டை கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர் தலைமறைவானார், கடந்த ஐந்து நாட்களாக கொழும்பு, மன்னார் மற்றும் கிழக்கில் பல பகுதிகளிலும் தேடுதல்கள் நடைபெற்றன. 6 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே இன்று 6 ஆம் நாள் அதிகல காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
