நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது நியூஸிலாந்து அணி.
இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களம் கண்டன. இதில் நாணயச் சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது.
நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களைப் பெற்றது.
நியூஸிலாந்து அணிக்காக சுசி பேட்ஸ் 32 ரன்கள், அமெலியா கெர் 43 ரன்கள், ப்ரூக் ஹாலிடே 38 ரன்கள் எடுத்தனர். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க விரட்டியது. முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது தென் ஆப்பிரிக்கா.
அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா. அந்த அணி மொத்தமாக 77 ரன்கள் எடுத்த போது 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 26 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் லாரா வோல்வார்ட் மட்டுமே 33 ரன்கள் எடுத்திருந்தார்.
மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்களை அந்த அணி எடுத்தது. அதன் மூலம் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. நியூஸிலாந்து சார்பில் அமெலியா கெர் மற்றும் ரோஸ்மேரி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நியூஸிலாந்து அணி விளையாடிய 17 டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டில் மட்டுமே வெற்றியை பெற்றிருந்தது. இந்த நிலையில் தான் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடரில் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களுக்கு ஏற்ப கள வியூகம் அமைத்து அந்த அணி செயல்பட்டது.