ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ருமேனியாவின் ஹொரியா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மேற்படி இரு இலங்கையர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
குறித்த இருவரும் வீதியோரமாக நடந்துசென்றுகொண்டிருந்தபோது எதிரில் வந்த வாகனம் அவர்களை மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ருமேனியாவில் பணியாற்றிவந்த இலங்கையர்கள் இருவரே விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.