ரூ. 1700 ஐ உடன் வழங்கு: பசறையில் நாளை போராட்டம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்ட கம்பனிகளின் அசமந்த போக்கை கண்டித்தும் பசறையில் நாளை (21) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் , பொது செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான், கட்சி தவிசாளர் ராமேஸ்வரன் மருதபாண்டி ஆகியோரின் வழிநடத்தலுமடன் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு கண்டன போராட்டத்தின் மற்றுமொரு அங்கமே பசறையில் நடைபெறுகின்றது.

21ஆந்திகதி காலை 8.30 மணிக்கு பசறை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிருபர் – நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles