தமக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பில் போராட்டமொன்றை நடத்துவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் தயாராகிவருகின்றனர்.
குறித்த போராட்டம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பெருந்தோட்ட துரைமார் சங்கத்தின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக இன்று செவ்வாய் கிழமை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒழுங்கு செய்துள்ளதாக காங்கிரஸின் தோட்ட கமிட்டி தலைவர்கள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் இந்த போராட்டம் 1700 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் பெருந்தோட்ட துரைமார் சங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போராட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள்,தோட்ட கமிட்டி பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.
ஆ.ரமேஷ்










