ரூ.1700 – சட்ட சமரில் வெற்றி கிடைக்குமென நம்புகிறோம்

தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இந்நாட்டின் வருங்கால சந்ததியை உருவாக்கும் கௌரவமான சேவையாக ஆசிரியர்களுக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அனைவரும் அதனை சரியாக புரிந்துகொண்டு மனசாட்சிப்படி செயற்படுமாறு இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார்,

தற்போதைய கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் ஊடாக இந்நாட்டின் கல்வித் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என நாம் நம்புகின்றோம். குறிப்பாக தொழிற் சந்தையை இலக்காகக் கொண்டு, ஐநூறுக்கும் மேற்பட்ட கொரிய, ஜெர்மன், பிரெஞ்சு, ஹிந்தி, சீன மற்றும் ஜப்பானிய மொழி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த நாட்டில் உள்ள 19 கல்வியியல் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற எதிர்பார்க்கின்றோம். அந்தப் பல்கலைக்கழகங்களில் இருந்து 04 வருடங்களின் பின்னர் பட்டதாரி ஆசிரியர்கள் உருவாகுவார்கள். இதன் மூலம் தற்போது கல்வியியல் கல்லூரிகளில் இணையும் 5,000 மாணவர்களின் எண்ணிக்கையை 7,500 ஆக அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 7500 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவார்கள். மேலும், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக பாடசாலைகளில் உள்ள வசதிகளை மேலும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவர்களுக்கு பயிற்றுவிக்க, பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வலயக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கையை 120 ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை வழங்கப்படாத ஆசிரியர் நியமனங்கள், மூன்றாம் தர அதிபர் நியமனங்கள் மற்றும் கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் நியமனங்கள் என்பனவும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் இந்த மறுசீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகளில் பணம் அறவிடுவது சட்டவிரோதமானது எனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு பணம் அறவிடுவதைத் தடுக்க பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.

ஆசிரியர் சேவை என்பது இந்நாட்டின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் துறையாகும். மற்றவர்களை விட அவர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. எனவே, தங்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும். ஆனால், இந்தப் பணிப்பகிஷ்கரிப்புகள் தொடர்ந்தால் தொழிற்சங்கங்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதை அவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர். எனவே, அவர்கள் வெவ்வேறு கதைகளைக் கூறினாலும், அவர்கள் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தோல்வியடைந்துள்ளன.

மேலும், மலையகத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாகவும் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது. நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலாளிமார் சம்மேளனம் நீதிமன்றம் சென்றுள்ளது. இதற்கு முன்னர் சம்பளம் அதிகரிக்கப்பட்டபோதும் இதேபோல் அவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றாலும் கூட அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேபோன்று இம்முறையும் அவ்வாறே இந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும் என்பதில் தொழிற்சங்கங்களாகிய எமக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னர், அரச ஊழியர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. தனியார் துறையினரின் சம்பளமும் அதிகரித்துள்ளது. உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கும் மக்களின் வாழ்க்கைச் செலவு தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பின்னர் சர்வதேச ரீதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமை தோன்றியுள்ளது. எமது நாடும் அதற்கு முகம்கொடுத்தது.

ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை, தற்போது மாறியுள்ளது. பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதன் காரணமாக, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வலுவடைந்துள்ளது.

மக்கள் சரியாக சிந்திந்து தமது முடிவுகளை எடுப்பார்களாயின், நாட்டை அதளபாதாளத்தில் இருந்து மீட்டெடுத்து நாட்டைக் காப்பாற்றிய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அதுதான் சரியான முடிவாகவும், மக்களுக்கான தீர்வாகவும் இருக்க முடியும்.” என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles