ரூ. 1700 வழங்க 7 கம்பனிகள் பச்சைக்கொடி!

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பள அதிகரிப்பை வழங்குவதாக 7 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சர் எதிர்வரும் திங்கட்கிழமை அது குறித்து சம்பள நிர்வாகச் சபையுடன் பேசவிருப்பதாகவும், அவசியம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான சட்டத்தை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டில் கண்டி ‘கரலிய’ அரங்கத்தில் இன்று (10) நடைபெற்ற தோட்ட தொழிற்சங்கங்களின் இளம் தலைவர்களின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles