பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபா வழங்க கோரி அக்கரப்பத்தனை பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு அழுத்தம் கொடுத்து அக்கரப்பத்தனை பிரதேச தோட்டங்களில் ஒருமணிநேர அடையாள போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை காலை ஈடுப்பட்டனர்.
தோட்ட பகுதிகளில், தொழிலாளர்கள் கம்பனிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஒரு மணி நேரம் அடையாள பணி பகிஷ்கரிப்பில் முதற் கட்டமாக ஈடுபட்டு, பின்னர் தொழிலுக்கு சென்றனர்.
ஆ.ரமேஸ்










