500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அது தொடர்பில் இன்று விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது.
இதன்போதே டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதியை பெறும் வகையில் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
அதன்பின்னர் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அனுப்பட்டு, அக்குழுவின் அனுமதி பெறப்படவுள்ளது.
குறைநிரப்பு பிரேரணைமீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன்போது அதற்கு ஆதரவாக எதிரணிகள் வாக்களிக்கக்கூடும்.
இதனால் 500 பில்லியனை பெறுவதற்குரிய குறைநிரப்பு பிரேரணைக்கு நாடாளுமன்றம் ஏகமனதாக ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
