ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இன்னும் முடிவு எடுக்கவில்லை – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க தெரிவித்தார்.
புதிய கூட்டணியில் இணைவதற்கு திட்டமிட்டுள்ளீர்களா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அரசியல் நிலைவரம் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் மக்களிடம் கருத்து கேட்டுவருகின்றேன். ஐக்கிய மக்கள் சக்தியிலோ அல்லது வேறு அணிகளிலோ இணைவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பிலும் தீர்மானமொன்றுக்கு வரவில்லை.
எனினும், விரைவில் எனது அரசியல் முடிவை அறிவிப்பேன். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.” – என்றார்.
