ரோஹிங்கியர்களை நாடு கடத்த வேண்டாம்!

ரோஹிங்கிய புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானம் என்பவற்றைக் கருத்திற்கொண்டே முடிவெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது ரோஹிங்கியர்களை நாடுகடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கூறியவை வருமாறு,

“ புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுகள் இணைந்து செயற்பட்டுவருகின்றன. இது விடயத்தில் மனிதாபிமானத்துடன் செயற்படுகின்றோம்.
தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானத்தைக் கருதியே உரிய முடிவெடுக்கப்படும்.” -என்றார்.

Related Articles

Latest Articles