ரோஹிங்கிய புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களை பராமரிக்ககூடிய நிலையில் நாடு இல்லை. எமது நாடு சிறிய நாடாகும். இங்கு வாழ்பவர்களே கஷ்டங்களுக்கு மத்தியில்தான் வாழ்கின்றனர். எனவே, இப்பிரச்சினைக்கு சர்வதேச மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும்.
இதற்குரிய சர்வதேச சட்டத்திட்டங்கள் உள்ளன.
அதற்கமைய தீர்வு தேடப்பட வேண்டும். புகலிடக்கோரிக்கையாளர்கள் விவகாரத்தைக் கையாள்வதற்கு ஐநாவில் தனி கிளையொன்றே உள்ளது. எனவே, ஐநா ஊடாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.” – என்றார்.