லங்கா பிரீமியர் லீக் ஜூலையில் ஆரம்பம்!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஆறாவது பருவகால போட்டிகளை ஜூலை மாத இறுதியில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜூலை மாத இறுதியில் இந்த தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக தொடரின் பணிப்பாளர் சமந்த தொடாங்வெல எமது இணையத்தளத்துக்கு பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார். இந்த தடவையும் தொடரில் ஐந்து அணிகள் விளையாடவுள்ளதுடன், ஆறாவது அணியை இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இம்முறையும் தொடர் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானம், தம்புள்ளை மற்றும் கண்டி பல்லேகலை மைதானங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான உத்தியோகபூர்வ போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles