லபுக்கலை விபத்தில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று உயிரிழப்பு!

நுவரெலியா, லபுக்கலை பகுதியில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (21.03.2023) உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலை தரப்பில் இருந்து இன்று தகவல் வழங்கப்பட்டது என உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

நுவரெலியா, கந்தப்பளை, ஐபோரஸ்ட் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் திருச்செல்வம் (வயது – 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறியொன்று கடந்த 5 ஆம் திகதி லபுக்கலை பகுதியில் வைத்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles