லயன் அறைகள் என்ற கருத்து ஒழிக்கப்படும்!

“ பெருந்தோட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போதுள்ள அனைத்து லயன் அறைகளையும் அரசாங்கம் கையகப்படுத்தி கிராமங்களாக மாற்றுவதற்கு மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். அப்போது பெருந்தோட்ட வளர்ச்சியுடன் லயன் அறைகள் என்ற கருத்து ஒழிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இன்று (25) ஆரம்பமான “கொழும்பு சர்வதேச தேயிலை மாநாட்டின்” ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு

“தேயிலை உட்பட எமது பெருந்தோட்டக் கைத்தொழில், 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்திலிருந்து நவீன பொருளாதாரமாக எம்மை மாற்றியது. தேயிலை கைத்தொழில் இல்லையென்றால் இன்று இந்நாட்டில் நவீனமயப்படுத்தல்கள் ஏற்பட்டிருக்காது. தேயிலை தொழில் இல்லாவிட்டால் ‘எல்ல’ பிரதேசம் சுற்றுலாத்தலமாக மாறியிருக்காது.

நாங்கள் இப்போது மற்றொரு விசேட கட்டத்தில் இருக்கிறோம். இங்கே நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும். 30 – 40 வருடங்களாக நிலம் மற்றும் தோட்டம் மூலம் பெறக்கூடிய வருமானத்தை இழந்த நாடாக மாறிவிட்டோம். அந்த வருமானத்தை மீளப் பெற தோட்டத்தையும் நாட்டையும் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அதிக வருமானத்தை பெறுவதில் கவனம் செலுத்தியுள்ள சிறிய தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் ஆகிய இரண்டு துறைகளிலும் முன்னேறும் விவசாய வர்த்தகம் எமக்கு அவசியம். இரண்டு தனித்துவமான கட்டங்கள் இருப்பதோடு அவற்றில் முதலாவது சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதாகும். கடந்த பொருளாதார நெருக்கடியின் போது மிகவும் பாதிக்கப்பட்ட மக்களில் பெருந்தோட்ட மக்களும் உள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அத்துடன், பெருந்தோட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போதுள்ள அனைத்து லயன் அறைகளையும் அரசாங்கம் கையகப்படுத்தி கிராமங்களாக மாற்றுவதற்கு மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். அப்போது பெருந்தோட்ட வளர்ச்சியுடன் லயன் அறைகள் என்ற கருத்து ஒழிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

வட மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை விட நுவரெலியா பகுதியில் பல பரிமாண வறுமை குறிகாட்டிகள் மிக அதிகமாக உள்ளது. எனவே, இந்த பிரச்சினையில் நாம் முதன்மையான கவனம் செலுத்த வேண்டும். மேலும், இந்த நேரத்தில் சில நிறுவனங்கள், குறிப்பாக சிறிய அளவிலான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடன் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பதில் சிக்கல் உள்ளது.

எமது நாட்டில் சிறு தோட்ட உரிமையாளர்கள் அதிகளவில் உள்ளனர், அவர்கள் மூலம் தோட்டத் தொழில்துறையை எவ்வாறு விவசாய வர்த்தகமாக மாற்றுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் தேயிலையை மட்டும் பயிரிடுகிறோமா அல்லது உங்கள் பகுதிகளில் ஸ்மார்ட் விவசாயத்திற்கு இடமளிக்கிறோமா என்று தீர்மானிக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் விவசாய வர்த்தகத்தின் வளர்ச்சிக்காக நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காணிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம். அதைப் பற்றி கண்டறிய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

எமது சில நிறுவனங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தேயிலை தொழிலில் இலங்கை முன்னணியில் இருக்கும் வரை அரசாங்கத்திற்கு பிரச்சினை இல்லை. அதனை நாம் முன்னேற வேண்டும். தேயிலை சந்தையில் இலங்கை ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

மேலும், நமது தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் பலப்படுத்தப்பட வேண்டும். அதற்காக அரசு மற்றும் தனியார் இணைந்து ஒரு வேலைத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ;” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles