‘லிட்ரோ கேஸ்’ – புதிய விலைப்பட்டியல் வெளியானது…!

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 3 ஆயிரத்து 565 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2. 5 கிலோ லிட்ரோ எரிவாயு விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக ஆயிரத்து 431 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 668 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles