லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தில் இருந்து நேற்று காணாமல்போன நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கா. கிருஷ்ணசாமி (70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் காணாமல் போன இவரை உறவினர்கள் மற்றும் தோட்ட பொதுமக்கள் இணைந்து தேடியபோது, இன்று காலை தேயிலை தோட்டப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப் பட்டுள்ளார்.
இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.
கௌசல்யா
