லிந்துலையில் தீ விபத்து – 3 லயன் அறைகள் தீக்கிரை!

லிந்துலை – பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 வீடுகள் முற்றாக எரிந்துள்ளன.

9 ஆம் இலக்கம் லயன் குடியிருப்பிலேயே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 லயன் அறைகள் குறித்த நெடுங்குடியிருப்பு தொகுதியில் இருந்துள்ளன.

பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், சொத்துகள் சேதம் அடைந்துள்ளன.

நிருபர் -கௌசய்லா

Related Articles

Latest Articles