லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 67 பாடசாலைகளில் கடமை புரியும் சுமார் ஆயிரத்து 100 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு நாளை முதல் சினோ பாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்படவுள்ளது என்று லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆறுமுகன் ஜெயராஜன் தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஹோல்புறுக்கு தமிழ் வித்தியாலயத்திலும், லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும், அக்கரபத்தனை, மெராயா ஆகிய இடங்களிலும் நாளை முதல் 16 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படும்.
பாடசாலைகளில் பணி புரியும் அதிபர் , ஆசிரியர்கள், பாடசாலைகளில் பணிபுரியம் ஊழியர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும் எனவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்
