தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை நகரில் இடம்பெற்ற தீ விபத்தில், லெமலியர் தோட்டத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளார்.
லிந்துலை நகரில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவேளை, திடீரென குறித்த நபரின் உடையில் தீ பரவியுள்ளது என கூறப்படுகின்றது.
சடலமானது தற்போது சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைகளுக்காக இன்னும் சற்று நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கௌசல்யா










