லிந்துலை பகுதியில் நேற்றிரவு விபத்து! பிரபல நடிகை ஹயசிந்த் விஜேரட்ன மரணம்!

இன்று அதிகாலை 1 மணியளவில் லிந்துலை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய பிரபல நடிகை ஒருவர் ஸ்தளத்திலேயே பலியானார்.

நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த Van ஒன்று  அட்டன – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 75 அடி பள்ளத்தில் விழுந்தமையினாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
வாகனத்தை செலுத்திய சாரதி படுகாயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான விசாரனைகளை லிந்துலை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.
கெளசல்யா சுரேஷ்

Related Articles

Latest Articles