சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவர் லுணுகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுவத்தை – கொஸ்கொல்ல பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்திற்கு விரைந்த லுணுகலை குற்றத்தடுப்பு பொலிஸார், கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தினை சுற்றி வளைத்தனர்.
இதன்போது கோடா மற்றுமு; கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் 36 வயதுடைய மடுவத்தை கொஸ்கொல்ல பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா