லெபலான் வெடிப்பு சம்பவம் – 78 பேர் பலி ! 4000 மேற்பட்டோர் காயம்!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட்டில் துறைமுக பகுதியில் நடந்த வெடிப்பு சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு கிடங்கில் 6 வருடங்களாக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் இந்த வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அந்நாட்டு  ஜனாதிபதி மைக்கேல் ஆன், 2750 டன் அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தது “ஏற்கத்தக்கதல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெடிப்பு சம்பவத்தால் பல்வேறு கட்டடங்கள் சேதம் ஆகியுள்ள நிலையில் காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்துள்ள அந்நாட்டு அதிபர் மைக்கேல் அவசரகால நிதியிலிருந்து 100 பில்லியன் லிரா உடனடியாக விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை பேரழிவு என்று குறிப்பிட்டுள்ள அந்நாட்டு அதிபர், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு மத்திய தரைக்கடலில் இருக்கும் சைப்ரஸ் தீவில் வெடிப்பு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles